×

ஐநா பாதுகாப்பு கவுன்சில் புதிய விதிகளின் கீழ் தற்காலிக உறுப்பினர் பதவிக்கான தேர்தல்: ஐநா பொது சபை தலைவர் தகவல்

நியூயார்க்: ஒவ்வொரு ஆண்டும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள 10 தற்காலிக உறுப்பினர் பதவிகளில் 5 இடங்களுக்கு தேர்தல் நடத்தப்படும். இதில் தேர்ந்தெடுக்கப்படும் நாடுகள் பதவிக்காலம் 2 ஆண்டுகள் ஆகும். இந்த முறை ஆசிய பசிபிக் பிராந்திய பிரதிநிதியாக இந்தியா மட்டுமே போட்டியிடுவதால் தற்காலிக உறுப்பினராக வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.  இந்நிலையில், தற்காலிக உறுப்பினர் பதவிக்கான தேர்தல் தொடர்பாக ஐநா சபை தலைவர் திஜானி முகமது பண்டே கூறியதாவது:
ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் 5 தற்காலிக உறுப்பினர் பதவிக்கான தேர்தல் வரும் 17ம் தேதி புதிய விதிமுறைகளின் கீழ் சமூக இடை வெளியுடன் நடத்தப்பட உள்ளது. 5 நாட்கள் முன் வாக்களிக்கும் உறுப்பினர் நாடுகளுக்கு கடிதம் அனுப்பப்படும். அதில் ஒதுக்கப்பட்ட நேரத்தில் வந்து வாக்களிக்கலாம்’’ என்றார்.

Tags : Election ,UN Security Council ,UN General Assembly , UN Security Council, Temporary Member, UN General Assembly Chair
× RELATED வடசென்னையில் வேட்புமனு தாக்கல்...