×

இந்திய எல்லையில் நிலநடுக்கம்

சில்லாங்: இந்திய - வங்கதேச எல்லையில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. மேகலாயா மாநிலம், சில்லாங்கின் சோராவில் இருந்து 82 கிமீ தொலைவில் இந்திய -  வங்கதேச எல்லைப் பகுதிகளில் நேற்று காலை 7.10 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 புள்ளிகளாக பதிவானது. மேகாலயா முழுவதும் நில நடுக்க அதிர்வுகளை மக்கள் உணர்ந்தனர். இதனால் , அங்கு மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்ச் சேதம், பொருட் சேதம் குறித்து தகவல் இல்லை.

Tags : Indian Border on Earthquake ,Earthquake , Earthquake , Indian border
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்