×

பெண் இன்ஸ்பெக்டர் உட்பட 6 போலீசாருக்கு கொரோனா

சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நுண்ணறிவு பிரிவு கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வந்த பெண் இன்ஸ்பெக்டர், சிந்தாதிரிப்பேட்டை சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் உட்பட மாநகரம் முழுவதும் 6 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து 2 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 6 போலீசாரையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும், அவர்களுடன் பணியாற்றி வந்த சக காவலர்களையும் அதிகாரிகள் தனிமைப்படுத்தியுள்ளனர். சென்னை மாநகர காவல் துறையில் நேற்று வரை 386 போலீசாருக்கு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர் தொற்றால் போலீசாரின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.



Tags : inspector ,Corona , Female Inspector, 6 Cops, Corona
× RELATED காவலர்கள், அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்குப்பதிவு: அதிகாரிகள் ஆய்வு