×

மின்நுகர்வோரை குழப்பத்தில் ஆழ்த்தி மக்களை சுரண்டும் மின்சார வாரியம்: வைகோ கண்டனம்

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை:ஊரடங்கால் மின் பயனீட்டு கணக்கெடுப்பு நடக்காத நிலையில், கடந்தமுறை செலுத்திய கட்டணத்தையே இந்த முறையும் செலுத்தலாம் என்று அறிவித்தனர். அதன்படி, ஜனவரி, பிப்ரவரியில் 350 யூனிட் பயன்படுத்தி இருந்தால், ரூ.650 மின் கட்டணம் மற்றும் நிலைக் கட்டணம் ரூ.30 சேர்த்து ரூ.710 செலுத்த வேண்டும். மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கும் இதே தொகையை மே முதல் வாரத்தில் செலுத்தி இருப்பர். மே, ஜூனில் 550 யூனிட் மின்சாரத்தை அதே நபர் பயன்படுத்த வேண்டிய நிலை உருவானால், அதற்கு அவர் ரூ.2110 மற்றும் நிலைக்கட்டணம் ரூ.30 என மொத்தம் ரூ.2140 செலுத்த வேண்டும். ஆனால் மின்சார வாரியமோ, ஏற்கனவே செலுத்திய 350 யூனிட்டுக்கு தற்போதைய 550 யூனிட்டையும் சேர்த்து, மொத்தமாக 900 யூனிட் கணக்கிட்டு ரூ.4,420 மற்றும் நிலைக்கட்டணம் ரூ.30 சேர்த்து, ரூ.4450 கட்டணம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

அதில், கடந்த முறை செலுத்திய ரூ.680ஐ (நிலுவைக் கட்டணம் அல்லாமல்) கழித்துவிட்டு ரூ.3770ஐ செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது. இதனால் அந்த நபரிடம் இருந்து 550 யூனிட்டுக்கு உள்ளான கட்டணமாக ரூ.2140க்கு பதிலாக, ரூ.1630 கூடுதலாகச் சேர்த்து வாங்குகிறார்கள். மின்நுகர்வோரை குழப்பத்தில் ஆழ்த்தி, மக்களைச் சுரண்டும் நிலைக்கு, தமிழக மின்சார வாரியம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்; கொரோனா பேரிடர் காலத்தில் மக்களை மேலும் துயரப் படுகுழியில் தள்ளக் கூடாது. எனவே, மின்சாரப் பயன்பாட்டை, ஒவ்வொரு மாதமும் கணக்கிட்டு, அதற்கு ஏற்ற மின் கட்டணம் தான் வாங்க வேண்டும்.  இதைச் சொல்லும்போது கிடைக்கும் எரிசக்திக்கு இணையானது எதுவுமில்லை, கலைஞர் வாழ்க, முத்தமிழறிஞர் கலைஞர் வாழ்க, எத்திசையும் ஏத்தும் எம் கலைஞர் வாழ்க வாழ்க. இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

Tags : Electricity Board ,Vaiko condemnation Electricity Board ,Vaiko , Electricity Board, Electricity Board, Vaiko
× RELATED பெரம்பலூரில் மின்கம்பிகளை உரசிய மரக்கிளைகளை அகற்றும் பணி