×

திடீர் உடல்நலக் குறைவால் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: உடல்நல குறைவால் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவும், திமுக சென்னை மேற்கு மாவட்ட செயலாளராகவும் உள்ள ஜெ.அன்பழகன் கடந்த சில நாட்களாக ஒன்றிணைவோம் என்ற திமுக திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். இந்நிலையில், அவருக்கு தி.நகரில் உள்ள அவரது வீட்டில் நேற்று முன்தினம் திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. அதைதொடர்ந்து, அவர் சிகிச்சைக்காக குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags : DMK ,J Anbhagan ,hospital , Health Disease, DMK MLA J.Anabhagan, Hospital
× RELATED மாநகர் மாவட்ட திமுக சார்பில் மக்களின்...