×

திரு.வி.க.நகர், தண்டையார்பேட்டை மண்டலங்களில் கொரோனாவுக்கு இளம்பெண் உட்பட 8 பேர் பலி

பெரம்பூர்: புளியந்தோப்பு, கன்னிகாபுரம், தாஸ் நகர் முதல் தெருவை சேர்ந்த 28 வயதுடைய இளம்பெண், நுங்கம்பாக்கத்தில் ஒரு தனியார் நிறுவன ஊழியராக பணியாற்றினார். இவர் கடந்த 24ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு, ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில், கடந்த 27ம் தேதி நோய்தொற்று உறுதியானது. இதைத் தொடர்ந்து அங்கு சிகிச்சை பெற்று வந்த அப்பெண் நேற்று முன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். அவரது உடல் நேற்று முன்தினம் இரவு பெரம்பூர், பிபீ ரோடு சுடுகாட்டில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டது.

இதேபோல், புளியந்தோப்பு, கன்னிகாபுரம், வெங்கடேசபுரம் 4வது தெருவை சேர்ந்த 79 வயது முதியவருக்கு ஏற்கெனவே ஆஸ்துமா நோய் இருந்தது. இவர் கடந்த 26ம் தேதி முதல் பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு மறுநாள் நடந்த பரிசோதனையில் கொரோனா நோய்தொற்று உறுதியானது. பின்னர் அவர் ஐசிஎப் ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவர் நேற்று முன்தினம் மதியம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். அவரது உடல் நேற்று மாலை அடக்கம் செய்யப்பட்டது. மேலும், புளியந்தோப்பு, பட்டாளம், மீனா காம்ப்ளக்ஸ் பகுதியை சேர்ந்த 72 வயது முதியவருக்கு இதயநோய் இருந்தது. இதனால் அவர்  ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் மதியம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். அவருக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா உறுதியானது. இதையடுத்து அவரது உடல் நேற்று மாநகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

புளியந்தோப்பு கன்னிகாபுரம் எம்.எஸ்.முத்து நகர் பகுதியை சேர்ந்தவர் 55 வயது பெண்மணி சென்னை 6வது மண்டல மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்தார். காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக கடந்த 1ம் தேதி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோல், பெரம்பூர் சுப்பிரமணி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் 70 வயது முதியவர் மூச்சுத்திணறலால் கடந்த 23ம் தேதி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 31ம் தேதி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். நேற்று முன்தினம் நள்ளிரவு இவருக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து நேற்று அதிகாலை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதேபோல், கொடுங்கையூர் கிருஷ்ணன் தெருவைச் சேர்ந்தவர் 75 வயது முதியவர் கடந்த 31ம் தேதி உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா உறுதியானது. கொடுங்கையூர் முத்தமிழ் நகர் சவுத் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் 69 வயது முதியவர் கடந்த 31ம் தேதி ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் மூச்சுத்திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பரிசோதனையில் கொரோனா உறுதியானது.

மேலும், ஓட்டேரி குளக்கரை சாலையை சேர்ந்தவர் 58 வயது நபருக்கு நேற்று காலை மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரது குடும்பத்தினர் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

Tags : Coroner ,teenager , Tiruvikanakar, Tondiarpet zone, in Corona, teenager, 8 killed
× RELATED பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி: டிரைவருக்கு 2 ஆண்டு சிறை