×

கொரோனா பாதித்த மூதாட்டி பாத்ரூமில் தவறி விழுந்து பலி

தண்டையார்பேட்டை: புழல் பகுதியை சேர்ந்த 65 வயது மூதாட்டி கடந்த வாரம் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் மாலை கொரோனா தனிவார்டில் உள்ள குளியலறைக்கு சென்றார். வெகு நேரமாகியும் அவர் வெளியில் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த உடனிருந்தவர்கள் அங்கு சென்று பார்த்தபோது, மூதாட்டி கீழே விழுந்து கிடந்தார். அவரை மருத்துவர்கள் சோதனை செய்து பார்த்ததில் மூதாட்டி இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் விசாரிக்கின்றனர்.


Tags : grandfather ,Corona ,bathroom , Corona, eldest, kills
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...