×

கலிதீர்த்தாள்குப்பத்தில் போலீசுக்கு சவால் விடும் மணல் கொள்ளையர்கள்

திருபுவனை: திருபுவனை அடுத்த மதகடிப்பட்டு அருகாமையில் கலித்தீர்தாள்குப்பம் ஊரல் குட்டை பகுதியில் நரிக்குறவர்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்புகளுக்கு அருகே மணல் திருட்டு நடைபெறுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 31) தமிழ்முரசில் படத்துடன் செய்தி வெளியானது. இதனையடுத்து நேற்று முன்தினம் திருபுவனை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பகுதியில் மணல் கடத்தலை தடுக்கும் வகையில் வண்டி செல்லும் பாதையில் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் பள்ளம் தோண்டி வைத்தனர்.

இதனால் நரிக்குறவர்கள் மற்றும் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனால் மணல் திருடர்கள் நேற்று இரவு அந்த பள்ளத்தை மீண்டும் மூடிவிட்டு டிராக்டரில் மணல் கடத்தி சென்றுள்ளனர். போலீசாருக்கே சவால் விடும் வகையில் மணல் கொள்ளையர்களின் செயல்பாடு உள்ளது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் உயர் அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுத்து மணல் கடத்தலை தடுக்க வேண்டும் அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Sand robbers ,Kalidirthuppupam , Kalidirthuppam, sand robbers
× RELATED சாத்தான்குளம் காவல் நிலையத்தில்...