கிருஷ்ணகிரியில் இன்று காலை பயங்கரம்; கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் படுகொலை?... சுடுகாட்டில் கை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் சுடுகாட்டில் கை துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபர் சடலம் மீட்கப்பட்டது. கள்ளக்காதல் விவகாரத்தில் நடந்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி பாரதியார்நகர் 4வது குறுக்கு தெருவில் இன்று காலை துண்டிக்கப்பட்ட நிலையில் கை ஒன்று கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி யடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக கிருஷ்ணகிரி தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீ சார் துண்டிக்கப்பட்ட கையை மீட்டனர். அந்த கை ஒரு ஆணுடையது என தெரியவந்தது. இதையடுத்து அருகே எங்கேயும் சடலம் உள்ளதா என போலீ சார் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, கிருஷ்ணகிரி கொய்யாங்கொட்டாய் சாலையில் உள்ள ஒரு சுடுகாட்டில் ஆண் சடலம் ஒன்று வலது கை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த கிருஷ்ணகிரி டிஎஸ்பி சரவணன், இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் அந்த சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். ஆனால் இறந்த வாலிபர் யார் என்பது குறித்து தெரியவில்லை. இதையடுத்து அந்த ஆணின் சடலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து சடலமாக மீட்கப்பட்ட அந்த நபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்?  பாரதியார் நகர் பகுதியில் கொலை செய்து விட்டு சடலத்தை சுடுகாட்டில் மர்மநபர்கள் வீசிச்சென்றனரா?

அல்லது வேறு எங்கே யாவது கொலை செய்து விட்டு கையை மட்டும் பாரதி நகரில் போட்டு விட்டு சடலத்தை சுடுகாட்டில் வீசிச்சென்றனரா? உள்ளிட்ட பல கோணத்தில் போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கொலை கள்ளக்காதல் விவகாரத்தில் நடந்திருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதன்பேரிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>