×

சிஎம்சிக்கு கொரோனா நோயாளிகள் வருகை அதிகரிப்பு; வேலூர்-ஆற்காடு சாலையில் கார் பைக்குகள் செல்ல தனித்தனி வழி

வேலூர்: சிஎம்சி மருத்துவமனைக்கு கொரோனா நோயாளிகள் வருகை அதிகரிப்பதால் வேலூர்-ஆற்காடு சாலையில் கார்கள், பைக்குகள் செல்ல தனித்தனி வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தற்போது வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களிலிருந்தும் கொரோனா நோயாளிகள் வர தொடங்கி உள்ளனர். தற்போது 14 பேர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே சிஎம்சி நிர்வாகம் கொரோனா நோயாளிகள் விவரங்களை சரியான முறையில் மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் வேலூர்-ஆற்காடு சாலையில் இரு இடங்களில் சோதனைக்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. சத்துவாச்சாரியில் இருந்து காகிதப்பட்டறை வழியாக வேலூருக்கு பைக்கில் மட்டுமே வரும் வகையில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வேலூர் பழைய பஸ்நிலையம் பகுதியில் இருந்து சிஎம்சி மருத்துவமனை நுழைவு வாயில் வரை இன்று காலை முதல் போக்குவரத்து புதிய முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, சாலையை மூன்றாக பிரித்து போரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பகுதியில் பைக்குகள் செல்லவும், மற்றொரு பாதையில் கார்கள், ஆட்டோக்கள் செல்லவும், 3வது பாதையில் திரும்பி வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வழியாக வரும் நான்கு சக்கர வாகனங்களின் விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. தினமும் சிஎம்சி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags : Visit ,Corona Patient ,CMC ,road ,Vellore-Arcot ,Vellore-Arcot road ,Corona Patient Visit , CMC, Corona Patients, Vellore-Arcot Road
× RELATED பாஜக ஆட்சியில் 140 கோடி இந்தியர்களும்...