×

களக்காட்டில் சாரல் மழை: தலையணையில் தண்ணீர் வரத்து

களக்காடு: களக்காடு பகுதியில் பெய்து வரும் சாரல் மழையினால் தலையணையில் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் தலையணை உள்ளது. இங்கு ஓடி வரும் தண்ணீரில் குளுமை அதிகம் என்பதால் அதில் குளிக்க சுற்றுலா பயணிகள் தனி ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் கோடை வெயிலால் தலையணையில் தண்ணீர் வற்ற தொடங்கியது. களக்காட்டில் அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னரும் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வந்தது. இதனால் கடுமையான வெப்பம் நிலவியது. வெப்பத்தின் தாக்கம் இரவிலும் நீடித்தது.

இந்நிலையில் களக்காடு, மாவடி, திருக்குறுங்குடி, சிதம்பரபுரம், மூங்கிலடி, மஞ்சுவிளை, மேலப்பத்தை, கீழப்பத்தை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இந்த மழையினால் தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளங்களில் தண்ணீர் தேங்கி காணப்பட்டது. குளிர்ந்த காற்றும் வீசியது. சாரல் மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுபோல களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையிலும் சாரல் மழை பெய்து வருகிறது. ஊர் பகுதியை விட மலைப்பகுதிகளில் சாரல் அதிகளவில் பெய்து வருகிறது.

இதனைதொடர்ந்து வறண்டு கிடந்த தலையணை, தேங்காய் உருளி அருவிகளில் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. தலையணையில் தடுப்பணையை தாண்டி தண்ணீர் விழுகிறது. தற்போது கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க தமிழகத்தில் தடை உத்தரவு அமுலில் இருப்பதால் களக்காடு தலையணை கடந்த மார்ச் 25ம்தேதி முதல் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் கூட்டம் இன்றி தலையணை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.


Tags : Kalakkad, light rain, pillow
× RELATED கோவை மாவட்டம் முண்டாந்துறை...