×

வெளிநாட்டு மருத்துவ நிபுணர், தொழில்நுட்ப நிபுணர் உள்ளிட்ட சில பிரிவினர் இந்தியா வர மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி

டெல்லி: வெளிநாட்டு மருத்துவ நிபுணர், தொழில்நுட்ப நிபுணர் உள்ளிட்ட சில பிரிவினர் இந்தியா வர மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. வெளிநாட்டு தொழிலதிபர்களும் சிறப்பு விமானங்களில் இந்தியா வர அனுமதி வழங்கியுள்ளது. வெளிநாட்டு தொழிலதிபர்கள் இந்தியா வர சிறப்பு விசா வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதையும் கொரோனா நோய்த்தொற்று அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா நோய் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா நோய்தொற்று இந்தியாவில் பரவ முக்கிய காரணம் வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்தவர்களை முறையாக பரிசோதிக்காமல் அனுமதித்ததே ஆகும் என்று ஒரு புறம் குற்றசாட்டு உள்ளது.

இந்நிலையில் வெளிநாட்டில் உள்ள நிறுவங்களின் சில இந்தியாவிலும் இயங்கி வருகிறது. அதற்கான பழுது பார்க்கும் பணிகள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கு அந்தந்த நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள், இன்ஜினியர்கள் இந்தியா வர வேண்டியது அவசியமாக உள்ளது. தற்போது இந்த கொரோனா காலத்தில் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல்வேறு மருத்துவ உபகரணங்களை கையாளுவதற்கும் வெளிநாட்டு மருத்துவ நிபுணர்கள் உதவி என்பது தேவை படுகிறது. இந்நிலையில் இந்நிலையில் வெளிநாட்டு தொழிலதிபர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் சிறப்பு விமானங்கள் மூலமாக இந்தியா வருவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா அச்சத்தால் வெளிநாட்டு விமான சேவைகளுக்கு மத்திய அரசு தடை விதித்த நிலையில், தற்பொழுது வெளிநாட்டு தொழிலதிபர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் சிறப்பு விமானங்கள் மூலமாக இந்தியா வருவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக சிறப்பு விசாக்கள் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. கடந்த 22-ம் தேதி முதல் வெளிநாட்டினர் யாரும் இந்தியாவிற்கு வராமல் இருந்த நிலையில் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.



Tags : Central Ministry of Home Affairs ,professionals ,India ,technicians , Foreign Medical Expert, Technician, India, Ministry of Home Affairs
× RELATED இந்தியா கூட்டணி கட்சிகள் கலந்தாலோசனை...