×

கோவில்களில் டோக்கன் கொடுத்து பக்தர்களை அனுமதிக்கலாம்; பூஜை அபிஷேக நேரங்களில் அனுமதிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டோம்: இந்து மத தலைவர்கள் பேட்டி

சென்னை: தமிழகத்தில் மாதவழிபாட்டு தலங்களை திறப்பது குறித்தும், அப்போது பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகள் குறித்தும் மத தலைவர்களோடு தலைமை செயலர் சண்முகம் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த இந்து மத தலைவர்கள் கோவில்களில் கூட்டம் கூடாமல் மக்கள் பூஜைகளை மேற்கொள்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறினார். தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்கும் வகையில் மாநிலம் முழுவதும் உள்ள கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடைவிதிக்கப்பட்டது.

அதேநேரத்தில் கோயில்களில் அர்ச்சகர்கள் மூலம் பூஜைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் ஆன்லைன் மூலம் இலவச மற்றும் கட்டண தரிசனம் என்று பிரித்து முன்பதிவு செய்யப்படுகிறது. இதற்காக கட்டணமாக ரூ.50 முதல் ரூ.500 வரை பெறப்படுகிறது. வரும் 8ம் தேதி முதல் கோயில்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதை தொடர்ந்து திருப்பதி கோயில் உட்பட நாடு முழுவதும் உள்ள முக்கிய கோயில்கள் திறக்கப்பட உள்ளன. தமிழகத்தில் முதற்கட்டமாக சென்னையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, திருவேற்காடு கருமாரியம்மன், மாங்காடு காமாட்சியம்மன் உட்பட 150 முக்கிய கோயில்களை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் மத தலைவர்களோடு தலைமை செயலர் சண்முகம் ஆலோசனை நடத்தினார்.தலைமை செயலருடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு இந்துமத தலைவர்கள் பேட்டியளித்தார். அப்போது; தமிழகத்தில் வழிபாட்டு தலங்களை திறக்க வேண்டும். தேரோட்டம், ஊர்வலம் உள்ளிட்டவை நடைபெற கூடாது. கோவில்களில் கூட்டத்தை கூட்ட வேண்டாம் என்று கூறி உள்ளோம். ஆன்லைனில் நாளுக்கு 100 டோக்கன் வழங்கி கோவில் வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும். பூஜை அபிஷேக நேரங்களில் பக்தர்களை அனுமதிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டோம்.அனைத்து மத மக்களும் அமைதி தேவை என விரும்புகிறார்கள். வரிசையில் நிற்க விடாமல் அனுப்பிக் கொண்டே இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் எனவும் கூறினார்.


Tags : Devotees ,temples ,pooja ,leaders , Temple, Pilgrims, Pooja anointed time, Hindu leaders
× RELATED புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை காஞ்சி...