×

மாணவர்களுக்கான 43 லட்சம் மாஸ்க்குகள் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது: அமைச்சர் செங்கோட்டையன் ட்வீட்

சென்னை: மாணவர்களுக்கான 43 லட்சம் மாஸ்க்குகள் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள மாணவர்களின் பொதுத்தேர்வை ஒத்திவைக்கும்படி பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன. இதுதொடர்பான மனுவும் இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதி அளித்துள்ளார். தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வுகமுடிவுகள் வெளியான பிறகு, பெற்றோரை அழைத்து பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.

தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகள் வெளியான பிறகே, பெற்றோர்களை அழைத்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும். அதே சமயம், மாணவர்களின் சுமையைக் குறைக்கும் வகையில், பள்ளிப் பாடங்களைக் குறைப்பது குறித்து 16 பேர் கொண்ட உயர்நிலைக் குழு ஆய்வு செய்து வருகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார். இந்த நிலையில், மாணவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பதிவிட்டுள்ளார். அதில், மாண்புமிகு முதல்வர் அவர்கள் தலைமையிலான குழு முடிவு செய்து, மாணவர்களுக்கு என்னென்ன பாதுகாப்புகள் அளிக்கப்பட வேண்டுமோ, அந்த பாதுகாப்புகளை அளித்து, தேர்வு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.

ஜூன் 11ம் தேதியன்றே விடுதிகளை திறப்பதற்கு மாண்புமிகு முதல்வர் அவர்கள் ஆணை பிறப்பித்திருக்கிறார். அந்த ஆணையின் அடிப்படையில் விடுதியில் தங்கி படிக்கின்ற மாணவர்கள், அந்த விடுதியிலேயே தங்கிக்கொள்ள வாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கிறது. மாணவர்களுக்கு தேவையான பேருந்து வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டிருக்கிறது. ஒரு வகுப்பறையில் 10 மாணவர்கள் தேர்வெழுதினால் போதும் என்ற முறையில், மாணவர்களுக்கான மருத்துவ ஆலோசனைகள் என்ன குறிப்பிடுகிறதோ, அதை கடைப்பிடித்து வருகிறோம். மாணவர்களுக்கான 43 லட்சம் மாஸ்க்குகள் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது, என குறிப்பிட்டுள்ளார்.

Tags : Sengottaiyan , Minister Sengottaiyan, Students, Security, Mask
× RELATED அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்ட பந்தலில் தீ விபத்து