×

தாவரவியல் பூங்காவிற்கு பேட்டரி கார்கள்: ஒத்திகை நிகழ்ச்சி நிறைவு

ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவை வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுற்றி பார்க்கும வகையில் பேட்டரி கார்கள் பயன்படுத்துவது தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா 90 ஏக்கர் பரப்பளவை கொண்டது. இந்த பூங்காவை வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் முழுமையாக பார்க்க முடிவதில்லை. இதனால், வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பூங்காவை சுற்றி பார்க்கும் வகையில் ேபட்டரி கார் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, தாவரவியல் பூங்காவில் பேட்டரி கார்கள் வசதியை ஏற்படுத்த வேண்டும் என தோட்டக்கலைத்துறை அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து தாவரவியல் பூங்காவில் பேட்டரி கார்கள் பயன்படுத்துவது தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா முன்னிலையில் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. கொரோனா பாதிப்பு காரணமாக பூங்கா கடந்த இரு மாதங்களாக மூடப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியளிப்பதில்லை. சுற்றுலா பயணிகள் வர அனுமதிக்கப்பட்டவுடன், இந்த பேட்டரி கார் வசதி அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : botanical garden ,rehearsal , Battery , botanical garden, rehearsal,concludes
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...