×

வடசென்னை, தென்சென்னை பகுதிகளில் நர்ஸ், இன்ஸ்பெக்டர் உள்பட 408 பேருக்கு கொரோனா

சென்னை: தண்டையார்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி, கொடுங்கையூர், தண்டையார்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று 164 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
* ராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட வண்ணாரப்பேட்டை, மண்ணடி, , ஏழுகிணறு, பாரிமுனைஉள்ளிட்ட பகுதியில் 119 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.
* திருவிக நகர் மண்டலத்திற்கு உட்பட்ட செம்பியம் காவலர் குடியிருப்பை  சேர்ந்த 35 வயது காவலர், காந்திஜி 7வது தெருவில் தம்பதி, காந்திஜி 5வது  தெருவில் ஒரு பெண்,  துளசிங்கம் தெருவில் 55 வயது டீக்கடைக்காரர், 55 வயது  மருத்துவ பணியாளர், பெரவள்ளூர் ஜிகேஎம் காலனி 27வது தெருவில் 23 வயது பெண்,  பெரியார் நகரில் 22 வயது செவிலியர், சந்தியப்பன் தெருவில் 60 வயது பெண்,  ஏகே சாமி தெருவில் 46 வயது நபர், ஓட்டேரி காவலர் குடியிருப்பில் 42 வயது  டிராபிக் இன்ஸ்பெக்டர், 39 வயது குற்றப்பிரிவு காவலர், நாராயண மேஸ்திரி  தெருவில் 20 வயது கர்ப்பிணி, டிம்பளர்ஸ் ரோடு பகுதியில் தம்பதி,  புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியில் 47 வயது வழக்கறிஞர், மன்னார்சாமி  தெருவில் மருத்துவரின் 47 வயது மனைவி, திருவிக நகர் காவல் பகுதியில் 11  பேர் என திருவிக நகர் மண்டலத்தில் நேற்று 63 பேருக்கு கொரோனா தொற்று  ஏற்பட்டுள்ளது.
* எம்ஜிஆர் நகரை சுற்றியுள்ள 23  தெருக்களில் 58 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்த பகுதியில் உள்ள 1257 வீடுகள் கட்டுப்படுத்தப்பட்ட  பகுதியாக அறிவிக்கப்பட்டு அனைத்து தெருக்களும் மூடி சீல் வைக்கப்பட்டன.
* ஆதம்பாக்கம் ராம் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில  நாட்களுக்கு முன் சிகிச்சைக்கு வந்த ஒரு  நோயாளிக்கு,  கொரோனா தொற்று  இருப்பது  தெரிய வந்தது. இதனையடுத்து அவரை ஆம்புலன்ஸ் மூலம் அரசு  மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், அங்கு பணியில்  இருந்தவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் பரிசோதனை செய்ததில், மேற்கண்ட  நோயாளிக்கு சிகிச்சை அளித்த  நர்ஸ் மற்றும் பெண் வரவேற்பாளர் ஆகியோருக்கு  நோய் தொற்று  இருப்பது நேற்று முன்தினம் தெரியவந்தது.இதனால் அந்த தனியார்  மருத்துவமனை மூடப்பட்டது.
* செம்மஞ்சேரி  போக்குவரத்து காவல் பிரிவில் ஒரு ஆய்வாளர், ஒரு எஸ்ஐ, 6 சிறப்பு எஸ்ஐக்கள்  உள்பட 15க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில்  போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் அவரது டிரைவர்கள் 2 பேர் ஆகியோருக்கு கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Tags : nurse ,areas ,inspector ,North and South ,Corona , Northcentral, Southcentral, Nurse, Inspector, Corona
× RELATED கொரோனாவுக்கு ஒரே நாளில் 3509 பேர் பாதிப்பு: மாவட்ட எல்லையில் போலீசார் சோதனை