×

விமான பயணிகளுக்கு பிசிஆர் சோதனை கட்டாயம்: தமிழக அரசு வழிகாட்டி நெறிமுறையை வெளியிட்டது

சென்னை: வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள், டெல்லி, குஜராத், மகாராஷ்டிராவில் இருந்து வரும் பயணிகளுக்கு பிசிஆர் சோதனை கட்டாயம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு  வழிகாட்டி நெறிமுறையை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 25ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விமானங்கள் இயக்கப்படுவதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டு தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில் அவர் கூறியிருப்பதாவது:
* பயணிகள் சோதனைக்கு பின்னரே விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா உறுதியானால் பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
* விமானத்தில் பயணம் செய்யும் முன்பாக தமிழகத்தில் பயணிப்பதற்கான இ-பாஸ் கட்டாயம் இருக்க வேண்டும்.
* தமிழகத்தில் சென்னை உட்பட பிற பகுதிகளில் பயணம் செய்வதற்கு 2 நாட்களுக்கு முன்பு ஐசிஎம்ஆர் அனுமதி வழங்கிய லேப்பில் பரிசோதனை செய்து அவர்களுக்கு நெகட்டிவ் வந்திருந்தால் அவர்கள் பரிசோதனையில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
* தொழில் தொடர்பாக பயணம் செய்யும் நபர்கள் 48 மணி நேரத்திற்குள் திரும்பி வந்தால் அவர்களுக்கு தனிமைப்படுத்தப்படுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். இல்லையெனில் அவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவாரகள். அவர்களது உடல் நிலை தொடர்பாக 7 நாட்கள் கண்காணிக்கப்பட வேண்டும்.
* தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளில் இருந்து விமானத்தில் பயணம் செய்யும் அனைத்து பயணிகளுக்கு பிசிஆர் சோதனை கட்டாயம் செய்ய வேண்டும். பாசிட்டிவ் வந்தால் அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்.
*  விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு பிசிஆர் பரிசோதனையில் நெகட்டிவ் வந்தால் கூட 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
* மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் குஜராத் மாநிலத்தில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வருபவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை கண்டிப்பாக எடுக்கப்பட வேண்டும். பாசிட்டிவ் வந்தால்  மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர். இல்லையென்றால் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்.
* அனைத்து பயணிகளுக்கும் அழியாத மையால் தனிமைப்படுத்தப்படுவதற்கான முத்திரையிடப்படும்.
* பொதுவாக பயணிகளுக்கு பரிசோதனை செய்யும் போது அதற்கான கட்டணம் மற்றும் ஓட்டல்களில் தனிமைப்படுத்துவதற்கான கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் கட்டணம் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. தனிமைப்படுத்தப்படும் பயணிகளை அந்தெந்த மாவட்ட கலெக்டர் நிர்வாகம், சென்னை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மருத்துவ அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.



Tags : PCR ,airport passengers ,Tamil Nadu ,government , Air Passenger, PCR Testing, Government of Tamil Nadu
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...