×

கொரோனா தாக்கத்தால் இலங்கையில் தவித்த 713 பேர் கப்பலில் தூத்துக்குடி வந்தனர்

தூத்துக்குடி: இந்தியாவில் இருந்து வேலைவாய்ப்பு, வணிகம், கல்விக்காக இலங்கைக்கு சென்றவர்கள் கொரோனா ஊரடங்கால் அங்கிருந்து திரும்ப முடியாமல் தவித்தனர். இலங்கையில் தவிக்கும் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்களை கடற்படை கப்பலான ஐஎன்எஸ் ஜலஷ்வா மூலம் தூத்துக்குடிக்கு அழைத்து வர மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி இலங்கை துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு அந்த கப்பல் 713 பயணிகளுடன் புறப்பட்டது. முன்னதாக பயணிகளை சுகாதார பணியாளர்கள் பரிசோதித்தனர். கப்பல் பயணிகளில் கர்நாடகா, புதுச்சேரியை சேர்ந்த தலா இருவரும், கேரளாவைச் சேர்ந்த 3 பேர் தவிர மற்ற 699 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

இவர்களில் 57 பேர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். 10 பேர் நெல்லையை சேர்ந்தவர்கள். நேற்று காலை 9.25 மணிக்கு தூத்துக்குடி துறைமுகத்துக்கு கப்பல் வந்தது. பயணிகளை தூத்துக்குடி கலெக்டர் சந்தீப்நந்தூரி, உள்ளிட்டோர் கைதட்டி வரவேற்றனர். பின்னர் 32 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் 25 பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். அனைவருக்கும் அந்தந்த மாவட்ட அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, கொரோனா இருந்தால் தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்படுவர். இல்லாதவர்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்படுவர்.


Tags : Sri Lanka ,corona attack ,Tuticorin. , Corona, Sri Lanka, Ship, Thoothukudi
× RELATED போலி பாஸ்போர்ட் மூலம் சென்னையில்...