×

நிசார்கா புயல் நிலைமை குறித்து மோடி ஆய்வு

புதுடெல்லி: அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், தாழ்வு நிலையாக மாறி தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த புயலுக்கு நிசார்கா என்று பெயரிடப்பட்டுள்ளது. இது இன்று மாலை 3 மணியளவில் வடக்கு மகாராஷ்டிரா, தெற்கு குஜராத் கடலோரப் பகுதியில் கரையைக் கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.  இந்நிலையில், பிரதமர் மோடி அவரது டிவிட்டர் பதிவில், `புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து நாட்டின் மேற்கு கடலோர பகுதிகளின் தயார் நிலையை ஆய்வு செய்தேன். அனைவரின் நலனுக்காகவும் பிரார்த்திகிறேன். மக்கள் அனைவரும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள கேட்டு கொள்கிறேன், என்று கூறியுள்ளார்.


Tags : Modi ,Nisarga , Nisarga Storm, Modi
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...