×

முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: வாலிபர் கைது

சென்னை: எழும்பூர் காவல் கட்டுப்பாட்டு தலைமை அலுவலகத்துக்கு நேற்று காலை அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபர் ‘சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடு மற்றும் தலைமை செயலகத்தில் வெடிகுண்டு வைத்திருக்கிறேன். இன்னும் சற்று நேரத்தில் வெடிக்கும்’ என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த காவலர்கள் உடனே அபிராமபுரம் மற்றும் கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் பசுமை வழிச்சாலையில் உள்ள முதல்வர் வீடு மற்றும் தலைமை செயலகத்தில் சோதனை நடத்தினர்.  அதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அது வெறும் புரளி என தெரியவந்தது.

தொடர்ந்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் அழைத்த செல்போன் எண்ணை வைத்து சைபர் கிரைம் உதவியுடன் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கூனிமேடு குப்பம் கிராமத்தை சேர்ந்த புவனேஷ் (20) என்று தெரியவந்தது. உடனே மரக்காணம் போலீசாருக்கு சென்னை மாநகர போலீசார் தகவல் அளித்தனர்.  அதன்படி மரக்காணம் போலீசார் கூனிமேடுகுப்பத்தை சேர்ந்த புவனேஷை கைது செயத்னர். அவர் இதற்கு முன்பு புதுச்சேரி முதல்வருக்கு வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.


Tags : Bomb attack ,home ,CM , Arrest of CM, Bomb threat, Youth
× RELATED வாக்களிக்க வந்தபோது ‘இந்திய நாடு என் வீடு’- பாடலை பாடினார் நடிகர் வடிவேலு