×

தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் பிறந்தநாளையொட்டி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது, ‘இன்று பிறந்த நாளை கொண்டாடும் தங்களுக்கு என் உளம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். பொது வாழ்வில் சிறப்பாக பணியாற்றி வரும் தாங்கள், நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் அனைத்து வளமும், நலமும் பெற்று நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இதையடுத்து, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நன்றி தெரிவித்தார்.

Tags : Governor ,Telangana ,birthday , Tamilisai Telangana Governor, CM, birthday greeting
× RELATED தெலங்கானா கவர்னர் தமிழிசைக்கு கொரோனா தொற்று இல்லை