குடியாத்தம் அருகே அதிகாலை காட்டு யானைகள் மீண்டும் அட்டகாசம்

குடியாத்தம்: குடியாத்தம் அருகே தமிழக-ஆந்திர எல்லையொட்டிய தனகொண்டபல்லி, மோடிகுப்பம், வலசை, கொட்டமிட்டா, சைனாகுண்டா, ராமாபுரம், சீவூரான்பட்டி, மத்தேட்டிபல்லி உள்ளிட்ட கிராமங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. கோடைக்காலம் என்பதால் வனப்பகுதியில் கடும் வறட்சி காரணமாக குடிநீரை தேடி கிராம பகுதிகளுக்குள் யானைகள் புகுந்துவிடுகிறது. அங்குள்ள மா, வாழை, நெல், தென்னை ஆகியவற்றை இரவோடு இரவாக சேதப்படுத்துகிறது.  இதனால் விவசாயிகள் கடும் வேதனையடைந்து வருகின்றனர். இவற்றை விரட்ட குடியாத்தம் வனத்துறையினர் பல்வேறு யுத்திகளை கையாள்கின்றனர்.

இருப்பினும் யானைகளிடம் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் இன்று அதிகாலை 7 காட்டு யானைகள், தனகொண்டபள்ளி கிராமத்தில்  புகுந்து மா மரங்களை துவம்சம் செய்தது. இத்தகவலறிந்த குடியாத்தம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பட்டாசு வெடித்து யானைகளை விரட்டியடித்தனர். யானைகள் சேதம் செய்த பயிர்களுக்கு இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Stories:

>