×

மலையடிவார பகுதியில் சாரலுடன் தென்றல் காற்று: குற்றாலத்தில் சீசன் துவங்கும் அறிகுறி

தென்காசி: ஆண்டுதோறும் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் சீசன் காலங்களாகும். அதாவது கேரளம் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் தென்மேற்கு பருவமழை என்றும் குற்றாலத்தில் சீசன் என்றும் அழைக்கப்படுகிறது. குற்றாலம் சீசன் சமயத்தில் வெயிலின் தாக்கம் மிகவும் குறைந்து காணப்படும். அவ்வப்போது மெல்லிய சாரல் பொழியும். இதமான தென்றல் காற்று வீசும். அருவிகளில் தண்ணீர் கொட்டும். மேற்குத் தொடர்ச்சி மலை முழுவதும் பசுமை போர்த்தியவாறு பச்சை பசேலென்று காணப்படும்.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் 1ம்தேதி துவங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் மிகச்சரியாக இன்று காலை சாரல் பெய்யத் துவங்கியது.  வெயில் இல்லை. இதமான தென்றல் காற்று வீசுகிறது. இதனால் சீசன் துவங்குவதற்கான அறிகுறிகள் தென்பட துவங்கியுள்ளது. அருவிகளில் தண்ணீர் விழும் துவங்கினால் சீசன் துவங்கி விட்டது என்று அர்த்தம். எனவே குற்றாலம் பகுதியில் உள்ளவர்கள் தண்ணீர் எப்பொழுது விழும் என்பதை  ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். அதேசமயம் தற்போது அருவிகளில் குளிப்பதற்கு நோய்த்தொற்று காரணமாக தடை உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Courtallam ,start , Courtallam, season, sign
× RELATED பொதுமக்கள் வௌியே செல்ல அச்சம் கோடை துவங்கும் முன் சுட்டெரிக்கும் வெயில்