×

வெட்டுக்கிளிகளை விரட்டி அடிக்க புதிய கருவி கண்டுபிடிப்பு : வில்லேஜ் விஞ்ஞானிகள் அசத்தல்!!

சென்னை: வெட்டுக்கிளிகளா விரட்டி அடிக்க புத்திசாலித்தனமாக புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 25 வருடங்களில் இல்லாத அளவுக்கு வெட்டுக் கிளிப் பிரச்சினையை இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் சந்தித்துள்ளன. இந்தியாவில் பெரும் பாதிப்பை இந்த வெட்டுக் கிளி படையெடுப்பு ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மேற்கு மற்றும் வட இந்திய மாவட்டங்கள் வெட்டுக் கிளி படையெடுப்பால் விவசாயிகள் கணிசமான பயிர்களை இழந்துள்ளனர். தமிழகத்திலும் தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் பயிர்களை வெட்டுக்கிளிகள் தாக்கி வருவதாக கூறப்படுகிறது.  

இந்த நிலையில் வெட்டுக்கிளிகளை எளிதில் விரட்டும் விதமாக சமூகவலைதளங்களில் ஒரு வைரல் வீடியோ உலா வருகிறது. இந்த வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் காஸ்வான் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் நவீன பிரச்சினைக்கு நவீன தீர்வுதான் தேவை. வெட்டுக்கிளிகளை விரட்ட உள்ளூர்வாசிகளின் பெஸ்ட் ஐடியா என குறிப்பிட்டுள்ளார். அதில் ஒரு கம்பத்தின் உச்சியில் ஒரு பக்கம் ஃபேனும் மறுபக்கம் டிரம் பாக்ஸும் உள்ளது. இவை இரண்டும் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் கொண்டு இணைக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்பீக்கர் பாக்ஸை சுற்றி ஒரு துடுப்பு போல் கார்டுபோர்டால் அமைக்கப்பட்டுள்ளது. இது அந்த கருவி நகருவதற்கு உதவும். காற்று அடித்தால் ஃபேன் சுற்றும், அப்போது அந்த டிரம் பாக்ஸில் இருந்து அதீத சப்தம் எழும். இந்த சப்தத்தால் வெட்டுக்கிளிகள் அச்சம் கொள்ளும். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. வெட்டுக்கிளிகளை விரட்ட பூச்சிக் கொல்லிகளை தெளிப்பதால் அது பயிர்களுக்கும் ஆபத்து. ஆனால் இது போன்ற யுத்திகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தது என நெட்டிசன்கள் பாராட்டியுள்ளனர். இன்னும் சிலர் இது நல்லத் தீர்வு என கருவி கண்டுபிடித்தவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Tags : village scientists ,grasshoppers , Locusts, chase, beat, new, instrument, invention, village, scientists, wacky
× RELATED வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த...