×

சூரிய மண்டலத்திற்குள் நுழையும் 900 அடி நீளமுள்ள பனிப்பாறை : வானியல் ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு

சிகாகோ :  விண்வெளியில் 900 அடி நீளமுள்ள பனிப்பாறை சூரிய மண்டலத்திற்குள் வருவதை வானியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பூமியின் சூரிய மண்டலத்தை கடந்து செல்லும் முதல் அறியப்பட்ட விண் பொருளான ஓமுவாமுவா, ஒரு வால்மீன், ஒரு சிறுகோள், சுருட்டு வடிவ விண்கலம் என குறிப்பிடப்படுகிறது. இந்நிலையில், ஓமுவாமுவா என்பது ஒரு ஹைட்ரஜன் பனிப்பாறை என்று யேல் மற்றும் சிகாகோ பல்கலைக்கழகத்தின் வானியலாளர்கள் கூறுகிறார்கள்.

கடந்த 2017ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஒமூவாமூவா பனிப்பாறை தற்போது சூரிய மண்டலத்திற்குள் நுழைந்துள்ளதாகவும், இதுபோன்ற ஹைட்ரஜன் பனிப்பாறை சூரிய மண்டலத்திற்குள் வருவது இதுவே முதன்முறை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது சனிக்கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையில் உள்ள பனிப்பாறை அதனைக் கடந்து செல்ல 10 ஆயிரம் ஆண்டுகள் ஆகும் என்றும் கூறியுள்ளனர். பனிப்பாறையின் கிராபிக்ஸ் படத்தையும் நிபுணர்கள் வெளியிட்டுள்ளனர்.

Tags : astronomers , Solar System, 900 feet, Length, Glacier, Astronomy, Explorers, Discovery
× RELATED சனிக்கோளில் புதிய வகை புயல் வானியலாளர்கள் கண்டுபுடிப்பு