×

ஆவுடையார்கோவிலில் கோடையிலும் குளிர்ச்சி தரும் மண்ஜாடி, குடுவைகள் விற்பனை: ஆர்வமுடன் மக்கள் வாங்கி செல்கின்றனர்

அறந்தாங்கி: ஆவுடையார்கோவிலில் கோடையிலும் குளிர்ச்சி தரக்கூடிய மண்ணால் செய்யப்பட்ட ஜாடி, குடுவைகள் உள்ளிட்டவை விற்பனைக்கு வந்துள்ளன. இதனை மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். மனிதன் பண்டைய பழக்க வழக்கங்களை கைவிட்டு நாகரீகத்திற்கு சென்றதன் விளைவாக பல்வேறு நோய்களின் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றான். பல ஆண்டுகளுக்கு முன்பு வீடுகளில் சமையலுக்கு மண்ணால் செய்யப்பட்டு, சுடப்பட்ட மண் பாத்திரங்களே பயன்படுத்தப்பட்டன. மண் சட்டியில் வைக்கப்படும் குழம்பின் ருசியே தனிதான். மண் சட்டி உள்ளிட்டவைகளை சுத்தம் செய்து, பராமர்ிப்பது சற்று கடினமான பணி. மேலும் மண் பாத்திரங்கள் சூடேற சற்று கூடுதல் நேரம் பிடிக்கும். நாகரீக வளர்ச்சியின் காரணமாக சமையலுக்கு மண்பாத்திரங்களுக்கு மாற்றாக எவர்சில்வர், அலுமினிய பாத்திரங்களை பயன்படுத்த தொடங்கினர். காலசுழற்சியில் மண் பாத்திரங்களை மீண்டும் பயன்படுத்த தொடங்கி உள்ளனர். நகரங்களில் ஸ்டார் ஓட்டல்களில் கூட தற்போது மண்பாத்திரங்களில் சமையல் செய்து கூடுதல் விலைக்கு உணவு வகைகளை விற்பனை செய்து வருகின்றனர்.

பள்ளி, அலுவலகங்களுக்கு செல்வோர் தங்களது பேக்குகளில் தண்ணீர் பாட்டில்களை எடுத்துச் செல்வது வாடிக்கையானது. ஆரம்பத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் கொண்டு செல்லும் பழக்கம் இருந்தது. பின்னர் உடல் ஆர்ோக்கியம் கருதி, காப்பர்பாட்டில்கள், எவர்சில்வர் பாட்டில்களில் தண்ணீர் கொண்டு சென்றனர். இந்நிலையில் ஆவுடையார்கோவில் பகுதியில் மண்ணால் செய்யப்பட்ட ஜாடி, குடுவைகள் விற்பனைக்கு வந்துள்ளன. மண்ணால் செய்யப்பட்டு சூளையில் வைத்து சுடப்பட்ட இவை சுகாதாரமாக இருப்பதோடு, உள்ளே இருக்கும் தண்ணீரும் குளிர்ச்சியாக இருக்கும். தண்ணீர் எப்போதும் குளிர்ச்சியாக இருப்பதால் இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். ஒரு குடுவை ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் மண்ணால் செய்யப்பட்ட தண்ணீர் வைக்கும் ஜக், ஊறுகாய் ஜாடி உள்ளிட்ட பல்வேறு மண்ணால் செய்யப்பட்ட பொருட்களும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து வியாபார்ி கூறுகையில். மண்ணால் செய்யப்பட்ட பொருட்களில் தண்ணீர் வைத்து குடித்தால் உடலுக்கு நன்மை தருவதோடு, உடலுக்கு குளிர்ச்சியையும் தருகிறது. தற்போது நாங்கள் திருவண்ணாமலையில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்து வருகிறோம். சிலர் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர் என்றார்.

Tags : summer cooling , jars , pots ,Oudayarikovil
× RELATED யானை தாக்கி விவசாயி பலி