×

ஊட்டி மலைப்பாதையில் காட்டுயானைகள் உலா : வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

குன்னூர்: தமிழகம் முழுவதும் கடந்த 2 மாதமாக ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில் ஊட்டி செல்லும் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் வாகனங்கள் இல்லாமல் அமைதியான சூழல் நிலவியது. குன்னூர் பர்லியாறு பகுதியில் பலா மரங்கள் அதிகளவில் உள்ளன. தற்போது மரங்களில் பலாப்பழங்கள் அதிகளவில் பழுத்து தொங்குவதால் காட்டு யானைகள் பாலப்பழத்தை ருசிக்க அதிகளவில் மலைப்பாதையில் உலா வருகின்றன. தற்போது மலைப்பாதையில் சுற்றுலா வாகனங்கள் தவிர்த்து இதர வாகனங்கள் சென்று வர அனுமதிக்கப்பட்டுள்ளது.  இதுநாள் வரை வாகனங்கள் இல்லாததால்  யானைகள் மகிழ்ச்சியாக சாலையில் உலா வந்தன. ஆனால் நேற்று முதல் பொது போக்குவரத்து துவங்கி உள்ளதால் அவை வாகனங்களை கண்டு அச்சமடைந்துள்ளன. எனவே வனப்பகுதிகளில்  வனவிலங்குகளின் குடி நீர் தேவையை பூர்த்தி செய்ய வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் மலைப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Wildlife Surfers ,Motorists ,Motorists Ooty Hills on Wildlife Surfers: From Forest Department Warning , Wildlife Surfers,Ooty Hills,Forest Department Warning , Motorists
× RELATED திருப்பதிசாரம் டோல்கேட்டில் கட்டணம் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி