×

வால்பாறைக்கு விதிமீறி வருகை தரும் சுற்றுலா பயணிகள்

வால்பாறை: பஸ்கள் இயக்கப்படுவதால் வால்பாறைக்கு விதிமீறி சுற்றுலா பயணிகள் வருவது அதிகரித்துள்ளது.  ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து நேற்று முதல் பஸ்கள் ஓடுகின்றன. இந்நிலையில் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடை உள்ளது. ஆனால் பஸ்கள் இயக்கப்படுவதால் பொதுமக்கள் போர்வையில் சுற்றுலாப்பயணிகள் வருவது அதிகரித்து உள்ளது.  மேலும் பலர் வால்பாறைக்கு வியாபாரத்திற்கு வருவதாக கூறி அட்டகட்டி மற்றும் ஆழியார் சோதனைச்சவாடி ஊழியர்களை ஏமாற்றி வருவதாக புகார் எழுந்துள்ளது.  இந்நிலையால் வால்பாறை கூழாங்கல் ஆற்றில் நேற்று அதிகளவில் கூட்டம் காணப்பட்டது.


Tags : Wallabies , Tourists, visiting , Wallabies
× RELATED ஊரடங்கு அமலில் இருந்ததால் சுற்றுலா...