×

மார்ச் மாதம் நிறுத்தி வைக்கப்பட்ட ரூ.1000 சலுகை கட்டண பஸ் பாஸ் ஜூன் 15 வரை பயன்படுத்தலாம்: அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு

மதுரை: கொரோனா ஊரடங்கு காலத்தில் மார்ச் மாதம் நிறுத்தி வைக்கப்பட்ட ரூ.1000 சலுகை கட்டண பஸ் பாஸை, வரும் 15ம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.  அரசு போக்குவரத்து கழகம், கிளை மேலாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்: கொரோனா தடுப்பு தொடர்பாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, பொது பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், ரூ.1000 பாஸ் பெற்றவர்கள் மார்ச் 16ம் தேதி முதல் மார்ச் 24ம்தேதி வரை 9 நாட்கள் மட்டுமே பயன்படுத்தியுள்ளனர். மேலும் மார்ச் 25ம் தேதி முதல் ஏப்.24ம் தேதி வரை 22 நாட்கள் பயன்படுத்த வில்லை.

எனவே, தற்சமயம் ஜூன் 1ம் தேதி முதல் பேருந்துகள் 50 சதவீதம் இயக்கிட அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே பெற்றுள்ள ரூ.1000 பாஸினை தற்சமயம் பயன்படுத்திக் கொள்ள பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் பெறப்பட்டுள்ள நிலையில், கடந்த மார்ச் மாதத்தில் வழங்கப்பட்ட ரூ.1000 பாஸினை ஜூன் 1ம் தேதி முதல் வரும் 15ம் தேதி வரை அனுமதிக்க நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. எனவே, கடந்த மார்ச் மாதத்தில் வழங்கப்பட்ட ரூ.1000 பாஸினை ஜூன் 1ம் தேதி முதல் வரும் 15ம் தேதி வரை அனுமதிக்க பஸ்களில் பணிபுரியும் அனைத்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Govt , Rs. 1000, concessionary bus pass , March
× RELATED சித்திரை திருவிழா பாதுகாப்பு:...