×

பாரம்பரியத்தை மீட்கிறதோ வைரஸ்? மாப்பிள்ளை, பொண்ணு மாட்டுவண்டியில் பயணம்: காரைக்குடியில் உறவினர்கள் உற்சாகம்

காரைக்குடி:  ஊரடங்கு காரணமாக வாகனங்கள் பயன்படுத்த கூடாது என்பதால் புதுமண தம்பதி மாட்டுவண்டியில் பயணம் செய்து மாப்பிள்ளை வீட்டுக்கு சென்றனர். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, கடந்த மார்ச் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்கு வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே பள்ளத்தூரை சேர்ந்த வேம்பையன் - அமுதா தம்பதி மகன் மகேந்திரபிரபுவுக்கும், நேமத்தான்பட்டி முத்து, கல்யாணி தம்பதியின் மகள் அனிதாவிற்கும் இடையே, ஊரடங்கு காரணமாக 2 முறை திருமணம் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால், நேற்று மிகவும் எளிமையாக பள்ளத்தூர் முருகன் கோயிலில் திருமணத்தை நடத்தினர்.

வாகனம் இல்லாததால் புதுமண தம்பதியை, மாப்பிள்ளை வீட்டிற்கு மாட்டு வண்டியில் உறவினர்கள் உற்சாகமாக அழைத்து சென்றனர். இதுகுறித்து மாப்பிள்ளை மகேந்திரபிரபு கூறுகையில், ‘‘நாங்கள் விவசாய குடும்பத்தினர். எனக்கு விவசாயம் செய்வது, மாடு வளர்ப்பது மிகவும் பிடிக்கும். வாகனங்கள் இயக்க முடியாத நிலை உள்ளதால், திருமணம் முடிந்து பெண்ணை எங்கள் வீட்டிற்கு மாட்டு வண்டியில் அழைத்து செல்ல முடிவு செய்தோம். நேற்று திருமணம் முடிந்த நிலையில் மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்றது மிகவும் சந்தோஷமாக இருந்தது’’ என்றார்.


Tags : Manikkunnu ,Karaikudi , restores ,Traveling , Manikkunnu, Ponnumu Beef, Relationships in Karaikudi
× RELATED உடல் பருமன் குறைய சிறுதானியங்கள் சாப்பிடுங்க