×

கொரோனா பரவலால் சென்னையில் கருணாநிதி பிறந்த நாளுக்கு ஆடம்பர நிகழ்வுகளை நடத்த வேண்டாம் : மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை : கொரோனா பரவலால் சென்னையில் கருணாநிதி பிறந்த நாளுக்கு ஆடம்பர நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என்றும் அவரவர் இடங்களிலேயே சமூக ஒழுங்கை கடைப்பிடித்து கருணாநிதி பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில்,

நம் உயிருடன் கலந்திருக்கும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 97வது பிறந்தநாளான நாளை (ஜூன் 3) அனைத்து மாவட்ட-ஒன்றிய-நகர- பகுதி - வட்ட - பேரூர் - கிளைக் கழக நிர்வாகிகள் அவரவர் இடங்களிலேயே தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கும் - திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்திட வேண்டுகிறேன்.

 கொரோனா பரவலால், குறிப்பாக சென்னையில் தலைவர் கலைஞர் பிறந்தநாளுக்கான எவ்வித ஆடம்பர நிகழ்வுகளையும் நடத்த வேண்டாம்.  கழகத் தலைவர் பொறுப்பில் உள்ள நான் தலைவர் கலைஞருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்விலும் யாரும் அணிதிரண்டிட வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஏற்கனவே அறிவித்தற்கிணங்க நலத்திட்ட உதவிகளை கழக நிர்வாகிகள் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். அவரவர் இடங்களிலிருந்தே சமூக ஒழுங்கினைக் கடைப்பிடித்து,  தலைவர் கலைஞர் அவர்களுக்கு மரியாதை செலுத்தியும் உதவிகள் செய்தும் தலைவர் கலைஞரின் புகழ் போற்றுவோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Tags : birthday ,luxury events ,Karunanidhi ,Chennai , Corona, Localization, Madras, Karunanidhi, Luxury Events, MK Stalin, Request
× RELATED இந்தத் தேர்தல் களத்தின் ஆட்ட நாயகன்...