×

உலகமே இந்தியாவை நம்பிக்கையுடன் எதிர்நோக்கியுள்ளது; தனது பொருளாதார வளர்ச்சியை மீண்டும் எட்டிப்பிடிக்கும்...பிரதமர் மோடி உரை...!

டெல்லி: இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் 125-வது ஆண்டு விழாவில் வளர்ச்சியை மீட்டெடுப்போம் என்ற தலைப்பில் டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, இந்தியாவின்  பொருளாதார கட்டமைப்பை மீட்கவும், வளர்ச்சியை நோக்கி பயணிக்கவும் ஆலோசனை வழங்கினார். மேலும், தொழில் மேம்பாட்டை ஊக்குவிப்பது தொடர்பாகவும் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அவை பின்வருமாறு...

* கொரோனாவில் இருந்து மக்களையும், நாட்டின் பொருளாதாரத்தையும் காப்பாற்ற வேண்டும்.
* முதற்கட்ட தளர்வுகளோடு வளர்ச்சியை மீண்டும் பெறும் நடவடிக்கையும் தொடங்கியுள்ளது.
* புதிய கண்டுபிடிப்புகளை இந்தியா படைக்கும் என்பதில் நம்பிக்கை உள்ளது.

* வருங்காலத்தில் சவால்களை சந்திக்க இந்தியா எப்போதும் தயாராக உள்ளது.
* வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைச் சட்டத்தில் துணிச்சலான திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
* விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை எங்கு வேண்டுமானாலும் விற்க உரிமை தரப்பட்டுள்ளது.

* பொருளாதார சீர்திருத்தத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல அரசு உறுதி பூண்டுள்ளது.
* நிலக்கரிச் சுரங்கங்களில் வர்த்தக ரீதியான உற்பத்திக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.
* நாட்டின் வளர்ச்சியில் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்களின் பங்கு முக்கியமானதாகும்.

* நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்களின் பங்கு 30%.
* சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் பல சீர்திருத்தங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.
* உலகமே இந்தியாவை நம்பிக்கையுடன் எதிர்நோக்கியுள்ளது.
 
* இந்தியாவை நம்பிக்கையான கூட்டாளியாக உலகம் பார்ப்பதாக பிரதமர் மோடி பெருமிதம்.
* இந்தியா மீண்டும் தனது பொருளாதார வளர்ச்சியை எட்டிப்பிடிக்கும் என பிரதமர் மோடி உறுதி.
* இந்தியாவிடம் வலிமை, திறமை மற்றும் ஆற்றல்கள் அதிகம் உள்ளன.

* இந்தியாவின் துணிச்சலான சீர்த்திருத்தங்கள் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும்
* ஜூன் 8-ம் தேதிக்கு பின் மேலும் பல துறைகள் செயல்படத் தொடங்கும் என்று உரையாற்றினார்.


Tags : Modi ,speech ,world ,India , The world is looking forward to India with confidence; Prime Minister Modi's speech will ...
× RELATED அரசமைப்பு சட்டத்தை மதிப்பதாக மோடி...