×

என்னாய்யா இந்த ஊரு டீ கசக்குது...? லண்டனில் ஹாயாக டீ குடிக்கும் நவாஸ்: கைது செய்ய வலுக்கும் கோரிக்கைகள்

இஸ்லாமாபாத்: சிகிச்சைக்காக வெளிநாடு சென்ற பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் லண்டன் ஓட்டலில் குடும்பத்துடன் அமர்ந்து தேனீர் குடிக்கும் புகைப்படம் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் (70). ஊழல் வழக்கில் சிக்கிய இவர் சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நவாசுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடல்நலக்குறைவை காரணம் காட்டி சிகிச்சை பெறுவதற்காக வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றத்திடம் அவரது குடும்பத்தினர் அனுமதி பெற்றனர். இதனை தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக இங்கிலாந்து அழைத்து செல்லப்பட்டதாகவும் அங்கு மருத்துவமனையில் நவாஸ் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் லண்டனில் ஓட்டல் ஒன்றில் நவாஸ் குடும்பத்துடன் அமர்ந்து தேனீர் அருந்துவது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இதில் நவாஸ் நல்ல ஆரோக்கியத்துடன் முககவசம் கூட அணியாமல் சாவகாசமாக அமர்ந்துள்ளார். இதனைத் தொடர்ந்து உடனடியாக அவரை கைது செய்து பாகிஸ்தான் அழைத்து வர வேண்டும் என்றும் சிறையில் அடைக்க வேண்டும் என்றும் எதிர்கட்சிகள் வலியுறுத்தத் தொடங்கி உள்ளன.

Tags : Nawaz ,London ,arrest , Eny.pd. on this ,Tea-drinking Nawaz , London, strengthening demands , arrest
× RELATED மருத்துவப் படிப்புக்கான நீட் தகுதித்...