×

4 சிறப்பு ரயில்கள் இயக்கம் இ-பாஸ் கட்டாயத்தால் பயணிகள் கடும் அவதி

சென்னை: தமிழகத்தில் 4 சிறப்பு ரயில்கள் நேற்று இயக்கப்பட்டது. இ பாஸ் பெற வேண்டும் என்ற கட்டாயத்தால் இதில் சென்ற பயணிகள் கடும் அவதிப்பட்டனர். கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டதையடுத்து கோவை - மயிலாடுதுறை,  மதுரை - விழுப்புரம், திருச்சி - நாகர்கோயில், கோவை -காட்பாடி ஆகிய 4 மார்க்கத்தில் தலா ஒரு ரயிலை இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்தது. இதற்கான முன்பதிவு சில தினங்களாக நடந்தது.இந்நிலையில், நேற்று ரயில் போக்குவரத்து துவங்கியது. மண்டலம் விட்டு மண்டலம் செல்பவர்கள் இ பாஸ் கட்டாயம் பெற வேண்டும் என்றும், மண்டலங்களுக்குள் செல்பவர்களுக்கு இ.பாஸ் தேவையில்லை என்றும் அரசு அறிவித்துள்ளது.தமிழக அரசின் இந்த திடீர் அறிவிப்பால் ஏற்கனவே ரயில்களில் செல்ல முன்பதிவு செய்த பயணிகள் அவசர அவசரமாக இ-பாஸ் பெற முயற்சித்து கடும் அவதிப்பட்டனர். பயணிகளின் சிரமத்தை குறைக்க சில ரயில் நிலையங்களிலே இ-பாஸ் வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திருச்சியிலிருந்து நேற்று காலை 6 மணிக்கு நாகர்கோவிலுக்கு இன்டர்சிட்டி ரயில் இயக்கப்பட்டது. 275 பயணிகள் பயணித்தனர். கோவையில் இருந்து மயிலாடுதுறை சென்ற ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் காலை 11 மணிக்கு திருச்சி வந்தது. குறைந்த அளவிலேயே பயணிகள் சென்றனர். அதேபோல், காலை 9.40 மணிக்கு மதுரையிலிருந்து விழுப்புரத்துக்கு சென்ற வைகை எக்ஸ்பிரஸ் திருச்சி வந்தது. அதில் குறைந்த அளவே பயணிகள் சென்றனர். திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இ-பாஸ் இல்லாத பயணிகளும் அனுமதிக்கப்பட்டனர்.


Tags : 4 Special, Trains Movement
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...