×

பாலக்காடு அருகே 11 மாத குழந்தை தண்ணீர் வாளியில் விழுந்து பலி

* கொரோனா அச்சத்தால் உதவிக்கு வராத அக்கம்பக்கத்தினர்

திருவனந்தபுரம்:  கேரள மாநிலம் பாலக்காடு அருகே சாலிச்சேரி பகுதியை சேர்ந்தவர் முகமது ஷாபிக். இவரது மனைவி லியானா. இவர்களுக்கு எக்ஸான் முகமது என்ற 11 மாத ஆண் குழந்தை இருந்தது. இந்த நிலையில் முகமது ஷாபிக்கின் உறவினர் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த நபருடன் தொடர்பில் இருந்த முகமது ஷாபிப் மற்றும் அவரது மனைவியும் தனிமையில் இருந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர்களது குழந்தையை திடீரென காணவில்லை. தேடி பார்த்தபோது வீட்டுக்கு வெளியே இருந்த தண்ணீர் வாளியில் குழந்தை மயங்கி கிடந்தது.  அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதால் வெளியே செல்ல முடியாது என்பதால் கதறி அழுந்தனர். பக்கத்து வீட்டினரை உதவிக்கு அழைத்தனர். ஆனால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததால் யாரும் உதவிக்கு செல்லவில்லை.

சிறிது நேரம் கழித்து அருகில் ஒரு லாட்ஜில் தனிமையில் இருந்த முகமது ஷாபிக்கின் தந்தை விரைந்து வந்து ஆம்புலன்ஸ் வரவழைத்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டது என தெரிவித்தனர். இறந்த அந்த குழந்தை வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுடன் இருந்ததால் அந்த தனியார் மருத்துவமனை உடனடியாக மூடப்பட்டது. அங்கிருந்த 5 நர்சுகளும் தனிமைப்படுத்தப்பட்டனர். ேமலும் பிரேத பரிசோதனை மற்றும் குழந்தைக்கு கொரோனா தொற்று உள்ளதா என்பதை கண்டறிய உடல் திருச்சூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

Tags : baby ,Palakkad , An 11-month-old baby,bucket , water ,Palakkad
× RELATED பச்சிளம் ஆண் குழந்தை கொல்லப்பட்ட...