×

முறிந்து விழும் ஆபத்தான நிலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் மின்கம்பம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பெருநகராட்சி 39வது வார்டு தெருவில் சுண்ணாம்புக்கார சுமார் 1000 பேர் வசிக்கின்றனர். இந்தத் தெருவில் ஒரு ஆண்டுக்கு மேலாக மின்கம்பம் முறிந்து விழும் நிலையில், பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த தெரு வழியாக சின்ன காஞ்சிபுரம் அமுதுபடி தெரு, நாகலூத்து தெரு உள்பட பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.
மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடந்தும் மின்வாரிய அதிகாரிகள், இந்த ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை கண்டுகொள்ளாமல் உள்ளனர். கீழ் பகுதியில் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து, போதுமான பிடிமானம் இல்லாமல், சாலையில் அமைத்த கான்கிரீட் மட்டுமே தாங்கி கொண்டு இருக்கிறது.

இதுகுறித்து பலமுறை மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை உடனடியாக அகற்றி, மாற்று ஏற்பாடு செய்யாவிட்டால், சூறைக் காற்று, மழைக் காலங்களில் பேராபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது. எனவே, மின்வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : public ,collapse ,state , wiring,threatens,public ,dangerous state,collapse
× RELATED கட்டளை மேட்டுவாய்க்கால் பகுதியில்...