×

68 நாட்களுக்கு பிறகு சென்னையில் சலூன்கள் திறப்பு: அதிகாலையில் கடை முன் காத்திருந்த வாடிக்கையாளர்கள்

சென்னை: சென்னையில் 68 நாட்களுக்கு பிறகு சலூன்கள் நேற்று திறக்கப்பட்டது. இதனால் அதிகாலையிலேயே கடை முன்பாக வாடிக்கையாளர்கள் காத்திருந்தனர்.தமிழகம் முழுவதும் மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு காரணமாக சலூன் கடைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் செல்ப் ஷேவிங் அதிகரித்தது. ஆனால் முடிவெட்ட முடியாமல் மக்கள் திணறினர். இந்நிலையில் கடந்த மே 19ம் தேதி முதல் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகள் தவிர ஊரக பகுதிகளில் சலூன்கள் திறக்க அரசு அனுமதி வழங்கியது. இதன்படி கிராமப்புறங்களில் மட்டும் சலூன்கள் செயல்பட்டு வந்தன. இதற்கிடையில் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த 15 நாட்களுக்கும் மேலாக 500க்கும் மேற்ப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டதால் சலூன்கள் திறக்க அனுமதி வழங்கினால் பாதிப்பு இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கருதி கடந்த 24ம் தேதி முதல் சென்னையை தவிர்த்து தமிழகம் முழுவதும் நகர்புறங்களில் சலூன் கடைகள் அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் 5வது கட்டமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட நிலையில் சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர பிற இடங்களில் சலூன்கள் திறக்க தமிழக அனுமதியளித்தது. அதைத் தொடர்ந்து 68 நாள்களுக்குப் பின் சென்னையில் கட்டுப்படுத்த பகுதிகளை தவிர பிற பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான சலூன்கள் திறக்கப்பட்டன. மேலும் நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று காலை 7 மணிக்கு சலூன் கடைகள் திறக்கப்பட்டதால் முடிவெட்டுவதற்கும், ஷேவிங் செய்வதற்கும் வாடிக்கையாளர்கள் சலூன் கடைகளுக்கு காலை 6 மணிக்கே வந்து காத்திருக்க தொடங்கினர். 


Tags : saloons ,Chennai ,Customers , After 68 days,saloons , Chennai, Customers waiting ,early morning
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!