×

பெண்களை நிர்வாண படம் எடுத்த வழக்கில் கொரோனா பாதித்தவரை கைது செய்த சேலம் போலீசுக்கு நோய் தொற்று: அதிகாரிகள் அதிர்ச்சி

சேலம்: சேலத்தில் பெண்களை நிர்வாண படம் எடுத்தவரை கைது செய்த போலீசுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சேலம் தாதகாப்பட்டியில் அழகு நிலையம் நடத்தி வந்தவர், வேலைக்கு என பெண்களை அழைத்து வந்து அவர்களை நிர்வாண படம் பிடித்து பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 4 பெண்கள் கொடுத்த புகாரின்பேரில், அழகு நிலையம் நடத்தி வந்தவர் உள்பட 3 பேரை சேலம் டவுன் மகளிர் போலீசார் கைது செய்தனர். தொடர் விசாரணையில் அழகு நிலையம் என்ற பெயரில் அவர் விபசாரம் செய்து வந்தது தெரியவந்தது. கைதான 3 பேருக்கு நடத்திய சோதனையில், அழகு நிலையம் நடத்தியவருக்கு கொரோனா நோய் தொற்று இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து சேலம் அரசு மருத்துவமனையில், அந்த நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இவரை கைது செய்த டவுன் மகளிர் போலீசார், அன்னதானப்பட்டி போலீசார் என 32 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். பெண் போலீசாருக்கு நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் ஆண் போலீசாருக்கு பரிசோதனை செய்ததில், ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர் கைதானவருக்கு பாதுகாப்பு கொடுத்தவர்.


Tags : Salem ,victim ,women ,Corona ,Coronation , Salem police ,infected ,coronation case
× RELATED கோடை விடுமுறையை குறிவைத்து ரயில்...