×

இந்தியா, அமெரிக்காவை சமாளிக்க சீனா புதிய யுக்தி : இணையத்தில் நாட்டையும் தலைவர்களையும் தாக்கும் ஓநாய் வீரர்கள் படை களமிறக்கியது!!

பெய்ஜிங்: இந்தியா மற்றும் அமெரிக்காவை சமாளிக்கும் வகையில் சீனா, புதிதாக ஓநாய் வீரர்களை களமிறக்கி உள்ளது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் நாளுக்கு நாள் சண்டை தீவிரம் அடைந்து கொண்டே செல்கிறது. லடாக் எல்லையில் சீனா நாளுக்கு நாள் அதிக அளவில் படைகளை குவித்து வருகிறது. அமெரிக்காவுடனும் தென் சீன கடல் எல்லையில் சீனா சண்டை போட்டு வருகிறது. அதேபோல் இன்னொரு பக்கம் வர்த்தக ரீதியாகவும் சண்டை நடக்கிறது. அதேபோல் ராஜாங்க ரீதியாகவும் சீனாவை தனிமைப்படுத்த அமெரிக்கா உள்ளிட்ட சில உலக நாடுகள் முயன்று வருகிறது.

இதனால் இந்தியா மற்றும் அமெரிக்காவை சமாளிக்கும் வகையில் சீனா தற்போது புதிதாக wolf warriors என்று அழைக்கப்படும் ஓநாய் வீரர்களை களமிறக்கி உள்ளது. ஓநாய் வீரர்கள் படை என்பது ஆயுதங்களை வைத்து தாக்குதல் நடத்தும் படை கிடையாது. மாறாக ஓநாய் வீரர்கள் படைநேரடியாக இணையத்தில் தலைவர்களை தாக்கும் படை ஆகும். அதேபோல் ராஜாங்க ரீதியாக காரியங்களை சாதிக்கும் குழு ஆகும். வெளிநாடுகள் இணையத்தில் செய்யும் பிரச்சாரங்களை முறியடிக்க ஓநாய் வீரர்கள் படை  அழைக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் ஃபேக் ஐடி கிடையாது. இதற்காக அரசே பணியாளர்களை நியமிக்கும் பணிகளை செய்து வருகிறது.

 இந்த குழுவின் சீனாவின் முன்னாள் உளவுத்துறை அதிகாரிகள், ராணுவ மேஜர், செய்தியாளார்கள், அரசியல் விமர்சகர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் வேலை ஒரு நாட்டை அவமானப்படுத்துவது. அந்நாட்டை இகழ்ந்து பேசுவது. அந்த நாட்டை மிக மோசமாக மிரட்டுவது. ரகசியங்களை வெளியிட போவதாக மிரட்டுவது, உளவு தகவல்களை வெளியிட போவதாக கூறுவது ஓநாய் வீரர்கள் படையின் முக்கிய அம்சம் ஆகும். இதனால் தற்போது இந்தியாவையே கூட, போர் ஏற்பட்டால் பெரிய இழப்பு உங்களுக்கு ஏற்படும், ஜாக்கிரதை என்று சீனா மிரட்டி இருக்கிறது. இதுவும் ஓநாய் வீரர்கள் படையின் வேலைதான் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : US ,India ,country ,China ,Wolf ,leaders ,warriors ,soldiers , India, US, China, Strategy, Internet, Attacking, Wolf Players, Force, Field
× RELATED அமெரிக்காவின் மேரிலேண்ட்...