×

சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பில் உலகின் மோசமான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 7வது இடம்!!

டெல்லி : உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளை மிஞ்சி இந்தியா 7வது இடத்திற்கு சென்றுள்ளது. இந்தியாவில் இதுவரை 1,90,609 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 223 பேர் உட்பட மொத்தம் 5,408 பேர் கொரோனாவுக்கு உயிரை பறிகொடுத்துள்ளனர். அதே நேரத்தில் 91,852 பேர் சிகிச்சைக்கு பின், முழுமையாக உடல் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக மராட்டியத்தில் 67,655 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்தபடியாக தமிழகத்தில் 22,333 பேரும் டெல்லியில் 19,844 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். உலக சுகாதார அமைப்பின் கொரோனா டிராக்கரின் கூற்றுப்படி, கொரோனா வைரஸ் வழக்குகளின் பாதிப்புகளின்  அடிப்படையில் 1,82,143 எண்ணிக்கையுடன் இந்தியா இப்போது உலகின் மோசமான ஏழாவது நாடாக மாறியுள்ளது.  அதிகபட்சமாக அமெரிக்காவில் கொரோனா பாதிகப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 லட்சத்தை தாண்டியுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக பிரேசில், ரஷியா, ஸ்பெயின், ஐரோப்பா, இத்தாலி ஆகிய நாடுகளை அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது. சர்வதேச அளவில் நாளுக்கு நாள் இந்தியா இந்த பட்டியலில் முன்னேறி வருவது கவலையளிக்கும் விதமாக உள்ளது.

Tags : India ,countries ,Coroners World ,world , International, Corona, World, Worst, Countries, List, India, 7th, Place
× RELATED ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்...