×

பட்டுப் பாப்பாவுக்கு பளபளப்பு டிப்ஸ்!

குழந்தை பிறந்தவுடன் பேபி சோப் வாங்கி கிஃப்ட் கொடுப்பது இன்று ஃபேஷனாகிவிட்டது. ஒரு காலத்தில் குழந்தைகளுக்கு எனப் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட இயற்கைப் பொடிகள்தான் அவர்கள் சருமத்தைக் காத்தன. இன்றும் ஏதேதோ வேதிப் பொருட்கள் கலந்த சோப்களைவிடவும் இயற்கையான குளியல் பொடிகளைப் பயன்படுத்தினால், குழந்தையின் பட்டுப்போன்ற சருமம் சுத்தமாவதோடும், அதன் இயற்கை அழகும் கெடாமல் இருக்கும்.

குழந்தையின் சருமத்துக்கு ஏற்ற இயற்கைப் பொடி தயாரிப்பது எப்படி?

தேவையானவை: பச்சைப் பயறு : 1/4 கிலோ, முட்டையின் வெள்ளைக் கரு : 4
ரோஜா : 8, கஸ்தூரி மஞ்சள் : 50 கிராம்
பூலாங்கிழங்கு : 50 கிராம்

செய்முறை :  

பச்சைப்பயறில் உள்ள கல், மண் நீக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் முட்டையின் வெள்ளை கருவை மட்டும் உடைத்து வைத்துக்கொள்ளுங்கள். நன்கு கலக்கிக் கொள்ளுங்கள். பச்சைப்பயறு இருக்கும் பாத்திரத்தில் முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இதை ஒரு பெரிய தட்டில்  வைத்துக் காய வைக்க வேண்டும். தினமும் ஒரு நாள் எடுத்து லேசாக கிளறி பரப்பிவிடுங்கள். இப்படி, நான்கு நாட்கள் வீட்டிலே வைத்துக் காயவைக்கலாம்.  வானிலைக்கேற்ப 4-6 நாட்களுக்குள் நன்றாக காய்ந்துவிடும். நான்கு நாள் கழித்து நன்றாக காய்ந்ததும் கட்டி, கட்டியாக இருக்கும். அதை கைகளாலே உதிர்த்துவிட முடியும். இதனுடன் கஸ்தூரி மஞ்சள், ரோஜா இதழ்கள், பூலாங்கிழங்கு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதை அரைக்க மெஷின் வைத்திருக்கும் கடைகளில் கொடுத்தும் அரைக்கலாம் அல்லது வீட்டிலும் அரைக்கலாம்.

எப்படி பயன்படுத்துவது?

பிறந்த குழந்தை முதல் யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். பிறந்த குழந்தை முதல் இரண்டு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தொடர்ந்து பூசி வந்தாலே சருமம் ஆரோக்கியமாகி, பிரகாசமாகவும் மாறும். பிறந்த குழந்தைக்கு, பெரியவர்களுக்கு என அவரவருக்கு ஏற்ற அளவில் எடுத்து அதில் சிறிது தண்ணீர்விட்டு குழைத்து பூசி குளிக்கலாம். சிலர் சோப் போட்டு குளிக்கும் பழக்கம் கொண்டவர்கள், சோப் போட்டு குளித்த பிறகு, இதை பூசி குளித்துவிடலாம். ஆனால், அதன் பிறகு சோப் போடக் கூடாது. முட்டை சேர்த்திருப்பதால் துர்நாற்றம் வீசுமோ என எண்ணம் வேண்டாம். முட்டையின் வெள்ளைகரு துர்நாற்றம் வீசாது. காயவைத்து, கூடுதலாக சில நல்ல பொருட்களை சேர்ப்பதால் எந்த வித கெட்ட வாசனையும் வராது.

Tags : Silk Poppa, Gloss, Tips
× RELATED இந்திய ஜனநாயக தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் சின்னங்கள்