×

டைகர் அண்ணே... ஸ்மைல் ப்ளீஸ்.... மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புலிகளை கணக்கெடுக்க 300 கேமரா: வனத்துறை சார்பில் பொருத்தும் பணி மும்முரம்

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள புலிகளை துல்லியமாக கணக்கெடுக்க 300 நவீன கேமராக்களை வனத்துறையினர் பொருத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில்  உள்ள வன விலங்குகளை ஒவ்வொரு ஆண்டும் வனத்துறையினர் கணக்கெடுத்து வருகின்றனர். இதில் தனியாக கேமராக்கள் பொருத்தி  புலிகளை மட்டும் கணக்கெடுக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது.  இந்த ஆண்டும் திருவில்லிபுத்தூர் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் வசிக்கும் புலிகளை துல்லியமாக கண்டறிய வனத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். கடந்த ஆண்டு வைத்த கேமராக்களில் எந்த இடங்களில் புலிகள் அதிக அளவு பதிவானது என்பதை ஆய்வு செய்து அந்த இடங்களில் அதிநவீன கேமராக்களைப் பொருத்த வனத்துறையினர் முடிவு செய்தனர். இப்பணி இன்று முதல் துவங்குகிறது.

இந்த கேமராக்கள் சுமார் 45 நாட்கள் வரை வனப்பகுதியில் வைக்கப்பட்டு புலிகள் நடமாட்டம் கண்காணிப்படும். ேகமராக்களுக்கு யானை உள்ளிட்ட வனவிலங்குகளால் சேதம் ஏற் படக்கூடாது என்பதற்காக 10 அல்லது 15 நாட்கள் வனத்துறையினர் சுழற்சி அடிப்படையில் கண்காணிக்க முடிவு செய்துள்ளனர். மேற்குத் தொடர்ச்சி மலையின் உச்சிப் பகுதியிலும், மிகவும் அடர்த்தியான பகுதிகளிலும் புலிகள் நடமாடும் குறிப்பிட்ட சில இடங்களில் நேற்று முன்தினமும் நேற்றும் கேமராக்கள் பொருத்தப்பட்டுவிட்டன. கேமரா பொருத்தும் பணி திருவில்லிபுத்தூர், ராஜபாளையம், வத்திராயிருப்பு மற்றும் மதுரை மாவட்டம் சாப்டூர் பகுதிகளை ஒட்டிய மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : Tiger Anne , Tiger Anne , Smile Pleas
× RELATED யானை தாக்கி விவசாயி பலி