×

கன்னி

13.6.2024 முதல் 19.6.2024 வரை

சாதகங்கள்: ராசிநாதன் பத்தாம் இடத்தில் சஞ்சரிக்க, அங்கே சூரியனும் சுக்கிரனும் இணைந்து இருக்கின்றார்கள். தனபாக்கிய அதிபதியான சுக்கிரன் தொழில் ஸ்தானத்தில் சூரியனுடன் இணைந்து சஞ்சரிப்பது நல்ல தொழில் வாய்ப்புகளைத் தரும். தன வரவு அதிகரிக்கும். குலதெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும். குடும்பத்தில் மங்கல ஓசை கேட்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கலைஞர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.

கவனம் தேவை: அஷ்டம ராசியில் செவ்வாய் இருப்பதையும், ஏழாம் ராசியில் ராகு இருப்பதையும் மறந்துவிட வேண்டாம். உணர்ச்சி வசப்பட்டு அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். ராசிக்குள் கேது இருப்பதால், மனக்குழப்பங்கள் எட்டிப் பார்க்கும். சோம்பேறித்தனம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் தேவையில்லாத வாதங்கள் உருவாகும். உறவினர்களிடம் எச்சரிக்கை தேவை. அறியாமல் செய்யும் காரியம் குடும்பத்தில் அமைதி இழக்கச் செய்யும்.

பரிகாரம்: சனிக் கிழமை காகத்திற்கு ஒரு உருண்டை சாதம் வையுங்கள். பிதுர்
காரியங்களை மறக்க வேண்டாம்.

 

 

 

 

 

 

 

 

Tags :
× RELATED மீனம்