×

கன்னி

27.6.2024 முதல் 3.7.2024 வரை

சாதகங்கள்: ராசிநாதன் புதன் பதினொன்றாம் இடத்தில் இருப்பது நல்ல அமைப்புதான். ஆடை ஆபரணச் சேர்க்கைகள் உண்டு. தொழில் ஸ்தானத்தில் சூரியன் சுக்கிரன் இணைந்து இருக்கின்றார்கள். சூரியன் பத்தாம் இடத்தில் இருப்பதும் சுக்கிரன் நட்பு நிலையில் இருப்பதும் தொழில் வர்த்தகத்தில் உங்கள் ஈடுபாடு அதிகரிப்பதையும் அதனால் முன்னேற்றம் ஏற்படுவதையும் குறிக்கிறது. பாக்கியஸ்தானத்தில் குரு பகவானும், 6ல் சனி பகவானும் பலமாக இருப்பது நல்லது குடும்ப சூழ்நிலை. மகிழ்ச்சி அளிக்கும்.

கவனம் தேவை: சப்தமஸ்தானத்தில் ராகு இருப்பதால், கணவன் அல்லது மனைவி உடல் நலனில் கவனம் தேவை. எட்டாம் இடத்தில் செவ்வாய் இருப்பதையும், கவனத்தில் கொள்ள வேண்டும். சுக்கிரன் நட்பு நிலையில் இருந்தாலும், கோச்சார ரீதியாக பத்தாம் இடத்தில் இருப்பது வரவேற்கத்தக்கதல்ல. பெண்கள் விஷயத்தில் கவனம் தேவை. கலைஞர்களுக்கு வாய்ப்புகள் சற்று குறையும் நிலை என்பதால், அவர்கள் வாடிக்கையாளர்களோடு தொடர்பு கொண்டு தங்கள் வாய்ப்புகளை தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.

சந்திராஷ்டமம்: 30.6.2024 காலை 7.35 முதல் 2.7.2024 காலை 11.14 வரை சந்திராஷ்டமம் உண்டு. சந்திராஷ்டம தினத்தில் பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

பரிகாரம்: சனிக்கிழமை காகத்திற்கு ஒரு உருண்டை சாதம் வையுங்கள். பிதுர் காரியங்களை மறக்க வேண்டாம்.

Tags : Virgin ,
× RELATED குமரி மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை