×

அரபிக்கடலில் உருவாக உள்ள புயல் நிசர்கா, வருகிற ஜூன் 3ம் தேதி, வடக்கு மகாராஷ்டிரா - தெற்கு குஜராத் இடையே கரையை கடக்கும் : இந்திய வானிலை ஆய்வு மையம்

டெல்லி : அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது என்றும் இது புயலாக வலுப்பெற்று வரும் 3ம் தேதி மாலை வடக்கு மகாராஷ்டிரா, தெற்கு குஜராத் இடையே புயல் கரையை கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் பட்சத்தில் நிசர்கா (NISARGA) என்று பெயரிடப்படும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

புயல் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், தென் மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியுள்ள நிலையில், தென்கிழக்கு அரபிக்கடல், கிழக்கு மத்திய அரபிக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை வலுப்பெற்று மண்டலமாக மாறியுள்ளது. மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகும். அடுத்த 48 மணி நேரத்தில் புயல் சின்னமாகவும் வலுப்பெற உள்ளது.  காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறினால், நிசர்கா என்று அழைக்கப்படும். வரும் 3ம் தேதி மாலை வடக்கு மகாராஷ்டிரா, தெற்கு குஜராத் இடையே புயல் கரையை கடக்கும், என்றும் கூறப்பட்டுள்ளது.


Tags : Cyclone Nisarga ,Arabian Sea ,North Maharashtra ,IMD ,South Gujarat , Arabian Sea, Storm, Nisarga, Northern Maharashtra, South Gujarat, Strip
× RELATED அடுத்த 3 நாட்களுக்கு அரபிக் கடல் பகுதியில் மீன் பிடிக்க செல்லவேண்டாம்