×

உலகம் மாபெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது; கண்ணுக்குத் தெரியாத எதிரியுடனான போரில் நமது மருத்துவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்; பிரதமர் மோடி உரை...!

டெல்லி: கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ராஜூவ் காந்தி மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக வெள்ளி விழாக் கொண்டாட்டத்தை டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது, உலகம் இன்று மாபெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. கண்ணுக்குத் தெரியாத எதிராக வைரஸ் திகழ்கிறது. கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் உலகம் போரிட்டு வருகிறது.

கொரோனாவுக்கு எதிரான போரில் வீரர்களுக்கான உடைகள் அணியாத போர் வீரர்களாக உள்ள நமது மருத்துவ பணியாளர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள். நமது மருத்துவர்கள் கொரோனாவை வெற்றிகொள்ளும் வல்லமை கொண்டவர்கள்.  மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு எதிரான வன்முறையை எந்த வகையிலும் ஏற்க முடியாது. மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு நீண்ட காலம் பிடிக்கும்.

அனைத்து மாநிலத்திலும் முதுகலை மருத்துவப் படிப்பிற்காக நிறுவனம் உருவாக்கப்படும். மருத்துவ கல்லூரிகளில் இளங்கலையில் 30,000 பேரும், முதுகலையில் 15,000 பேரும் சேர்க்கப்படுவர். இந்தியாவில் மருத்துவக்கல்வியின் தரம் மேலும்  மேம்படுத்தப்படும். காசநோயை 2025-ல் முற்றிலும் ஒழிப்பதற்கு இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. கொரோனா தடுப்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது என்றும் பிரதமர் மோடி உரையாற்றினார்.


Tags : doctors ,world ,Modi ,crisis ,battle , The world is facing a great crisis; Our doctors will win the battle against the invisible enemy; PM Modi's speech ...!
× RELATED தண்ணீரை விலை கொடுத்து வாங்குவது நூற்றாண்டின் மிகப்பெரும் அவலம்