×

மனநலம் பாதித்தவர் தாக்கியதில் 2 கண்களை இழந்தது தெரு நாய்: அரும்பாக்கம் பகுதியில் பரிதாபம்

அண்ணாநகர்: சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியில் சுற்றித் திரிந்த தெரு நாயை, மர்மநபர் தாக்கியதில் இரு கண்களும் வெளியே வந்த நிலையில் ஆபத்தான நிலையில் சுற்றித் திரிந்தது. இதை பார்த்த பொதுமக்கள், கோடம்பாக்கத்தை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் அஸ்வந்த் (23) என்பவருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அவர் சம்பவ இடத்துக்கு வந்து, படுகாயமடைந்த நாயை மீட்டு சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தார். அப்போது, மர்ம நபர் பலமாக தாக்கியதில், அந்த நாய்க்கு பார்வை பறிபோனது தெரியவந்தது.

இதையடுத்து அந்த நாயின் கண்களில் கட்டு போட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.  பின்னர், நாயை தாக்கிய நபர் மீது நடவடிக்கை கோரி, விலங்குகள் நல ஆர்வலர் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். போலீசார் விசாரணையில் அந்த பகுதியில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர், இந்த நாயை தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை மீட்டு மனநல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பார்வை இழந்த நாயை அஸ்வந்த் தனது வீட்டிற்கு அழைத்து சென்று பராமரித்து வருகிறார்.


Tags : area ,Arumbakkam , 2 eyes lost, hitting mentally, ill street dog, awful in Arumbakkam area
× RELATED அரும்பாக்கம் பகுதியில் மருந்து வாங்க...