×

திருப்போரூரில் மீண்டும் களை கட்டியது டாஸ்மாக்கில் சரக்கு முழுவதும் விற்பனை

திருப்போரூர்: ஜூன் மாதம் 1ம் தேதி முதல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாகவும், இதனால் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் நேற்று முன் தினம் முதலே வாட்சப் வதந்திகள் றெக்கை கட்டி பறக்கத் தொடங்கின. இதனால் நேற்று காலை முதலே குடிமகன்கள் சென்னைப் புறநகர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை முற்றுகையிடத் தொடங்கினர். இதனால் வழக்கத்தை விட பல கடைகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

 காலை முதலே அதிக வாடிக்கையாளர்கள் வந்ததால் பிற்பகல் 2 மணிக்கெல்லாம் திருப்போரூரில் இருந்த 4 மதுபானக்கடைகளிலும் விஸ்கி, பிராந்தி போன்றவை காலியானது. வோட்காவும், பீரும் மட்டுமே இருந்ததால் குடி மகன்கள் ஏமாற்றத்துடன் அவற்றை வாங்கிச் சென்றனர். ஒரு கட்டத்தில் 3 கடைகளில் அவைகளும் காலியாகின.


Tags : Rebuilding Weed,Tirupporeur Tasmak Inventory, sale
× RELATED வெளிமாவட்டங்களுக்கு செல்லும் வைக்கோல்: கட்டு ரூ.130க்கு விற்பனை