×

எத்தியோப்பியாவில் அசத்தும் மதுரை பேராசிரியர்

* 43 இடங்களில் பாலங்கள் 28 குடிநீர் சுத்திகரிப்பு மையம்

அடிடாஸ்அபா: மதுரை அலங்காநல்லூர் பொந்துகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் அம்பலம். மதுரை தியாகராயர் கல்லூரியில் பிஎஸ்சி வேதியியல் பட்டம் பெற்ற இவர், பின்னர் எம்எஸ்சி முடித்தார். டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலையில் எம்பில் மற்றும் பிஎச்டி முடித்தார். இந்நிலையில், கண்ணன் அம்பலத்துக்கு ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவில் உள்ள ஒல்லேகா பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் வேலை கிடைத்தது. அங்கு பணியாற்றி வரும் கண்ணன், வேலைக்கு சேர்ந்த புதிதில் பல்கலைக் கழகம் அருகேயுள்ள செவக்கா கிராமத்தில் மூதாட்டி ஒருவர் நீர் பாய்ந்தோடும் ஆற்றை கடக்கும்போது தவறி விழுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும், அப்பகுதியில் அடிக்கடி ஆற்றை கடக்கும்போது தவறி விழுந்து சிலர் பலியானதை நேரில் பார்த்ததால் அதற்கு தீர்வு காண முயன்றார்.

 இதற்காக பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்து ஆலோசனை செய்தபோது தான், குறுகலான இந்த ஆற்றில் மரப்பாலம் அமைத்தார். ஆனால், எத்தியோப்பியாவில் பெரும்பாலும் போக்குவரத்து பணியில் கழுதைகள் ஈடுபடுத்தப்படுவதால் கழுதையின் கால்கள் மரப்பாலத்தில் சிக்கி கொண்டு தவித்ததால் சிமென்ட் பாலமாக மாற்றி கட்டினார்கள். இவ்வாறு 43 இடங்களில் சிறு சிறு பாலங்கள் கட்டியுள்ளார். இது தவிர குடிநீருக்கு மக்கள் படும்பாட்டை பார்த்து 28 இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு மையங்களும் அமைத்துள்ளார். சுத்திகரிப்பு  மையம் அல்லது பாலம் கட்ட அதிகபட்சம் ₹8 ஆயிரம் வரை செலவாகும் என்பதால் பெரும்பாலும் தனது சம்பள பணத்தையை இதற்கு செலவிட்டுள்ளார். சில நேரங்களில் நண்பர்களும் பண உதவி செய்துள்ளார்கள்.


Tags : Astana Madurai ,Ethiopia , Professor, Astana Madurai, Ethiopia
× RELATED எத்தியோப்பியாவில் இருந்து...