×

இம்மாதம் நடக்க இருந்த ஜி-7 நாடுகள் மாநாடு ஒத்திவைப்பு

வாஷிங்டன்: உலகின் வளர்ந்த நாடுகளின் அமைப்பு ஜி-7. இதில் முக்கிய உறுப்பினர் அமெரிக்கா. தற்போது உலகம் முழுவதும் கொரோனா ருத்ரதாண்டவம் ஆடிவரும் நிலையில், ஜி-7 நாடுகளின் உச்சி மாநாட்டை உடனடியாக கூட்டி அதுபற்றி விவாதிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வந்தார். மேலும், இந்த அமைப்பில் இந்தியாவையும் ஒரு உறுப்பினராக சேர்ப்பதற்கு அமெரிக்கா தீவிரமாக முயன்று வந்தது. இந்த உச்சி மாநாடு இம்மாதம் 10ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் அமெரிக்காவில் தீவிரமாக நடந்து வந்த நிலையில், மாநாட்டிற்கு ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் எதிர்ப்பு தெரிவித்தார்.

மேலும், சில நாடுகள் இந்த மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும், மாநாட்டை நடத்துவதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பிடிவாதமாக இருந்தார். இந்நிலையில், திடீரென ஜி-7 நாடுகளின் மாநாட்டை அமெரிக்க அதிபர் டிரம்ப், செப்டம்பர் மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளார். கேப் கார்னிவலுக்கு சென்றுவிட்டு  வாஷிங்டன் திரும்பும் வழியில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், இதை தெரிவித்தார்.

இந்தியாவுக்கு அழைப்பு
டிரம்ப் மேலும் கூறுகையில், ‘‘ஐநா சபையின் ஆண்டு மாநாட்டுக்கு முன்போ அல்லது பிறகோ ஜி-7 மாநாடு நடைபெறும். இதில் பங்கேற்கும்படி ரஷ்யா, தென்கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் இந்திய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்,’’ என்றார்.

Tags : summit ,countries , Postponement, G-7 countries , held, month
× RELATED சென்னை ஐஐடியில் முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு